Astrology

Sevvai Thosam – செவ்வாய் தோஷம்

Sevvai Thosam – செவ்வாய் தோஷம் – செவ்வாய் தோஷம் என்றால் உண்மையில் என்ன?ஆரூடத்தின் படி, செவ்வாய் தோஷம் என்றால் பிற தோஷங்கள் போல நம் முன்னோர் செய்த தீங்கினாலோ அல்லது நாம் முற்பிறவியில் நம்மை அறியாது செய்த குற்றங்களினாலோ ஏற்படுவது அல்ல.செவ்வாய் கோள் என்பது ஒரு வெப்பம் நிரைந்த நெருப்பு கோள் ஆகும்.வீரம் செரிந்தது.

Sevvai Thosam – செவ்வாய் தோஷம்

Sevvai Thosam - செவ்வாய் தோஷம்

செவ்வாய், ஜாத்கத்தில் வலுப்பெற்றால் அவர்கள் இரானுவம், காவல் துறை, தீயனைப்பு துறை என வீரம் தேவையுள்ள உயர் பொருப்புக்களில் வாழ்வில் சிறந்து விளங்குவர்.

சிலருக்கு இந்த செவ்வாய் தோஷமாக அமையும். இப்படி தோஷமாக அமையப்பெற்றவர்களுக்கு எளிதில் திருமணம் நடந்தேராது.

Sevvai Thosam – யாருக்கு செவ்வாய் தோஷம்?

பிறப்பு சாதகத்தில் லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலிய கோள்களுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருதப்படும்.

மேற்சொன்ன கணக்கு முறையை வைத்துக்கொண்டு செவ்வாய் இவற்றில் எங்காவது ஒரு இடத்தில் உள்ளதா என்று பார்த்துவிட்டு இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ளது என கூறிவிடுவர்.

Sevvai Thosam – விதி விலக்கு

இதில் இராசியை பொருத்து விதி விலக்கும் உண்டு. மேற்சொன்ன கணக்குப் படி 100 பேருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதாக கணக்கிடோமானால், இந்த தள்ளு விதியை கொண்டு செவ்வாய் தோஷம் உள்ளவர் பட்டியலை நீக்கினால் மீதம் 3 பேர் தான் தேருவார்கள்.

அந்த விலக்கு விதி என்னவென்றால், 

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது.

சூரியன், அறிவன் (புதன்), வியாழன் (குரு), காரி (சனி), ராகு, கேது முதலிய கோள்களில் ஏதோ ஒன்றுடன் செவ்வாய் இணைந்து இருருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ தோஷம் இல்லை.

செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒருஇடத்திலிருந்தாலும் தோஷம் இல்லை.செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷம் இல்லை.

சிம்மம், கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷம் இல்லை

அறிவனும் (புதன்), செவ்வாயும், சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் இல்லை.

வியாழனும் (குரு), செவ்வாயும், சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் இல்லை.

சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும்,தோஷம் இல்லை.

அது ஏன் இந்த விதி விலக்கு என்றால், தொடர்புடைய இராசி வீடுகளில் செவ்வாய் ஆட்சியானது உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் இல்லாமல் போகும்.

sevvai thosam

தோஷத்திற்கு தோஷம் தான் பொருத்தம்

40 வயதை கடந்த ஆண் பெண்ணிற்கு இந்த தோஷம் மட்டுமல்ல எந்த தோஷமும் இல்லை என கொள்ளலாம். அவர்களுக்கு ஜாதக பொருத்தம் பார்க்க தேவை இல்லை.

இந்த செவ்வாய் தோஷம் உடையவர்கள் வெப்பம் அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், அதற்கு இணையாக அதே போன்ற வெப்பம் உடைய்வர்களையே மனம் முடிப்பது சிறந்தது.தேவைக்கு தேவை சரி செய்து கொள்ளும். அதனால் இல்லறம் சிறக்கும்.

செவ்வாய் தோஷம் நீக்க என்ன வழி?

உண்மையை சொன்னால் இந்த தோஷம் உடையவர்கள் அதே தோஷம் கொண்டவர்களை மனப்பதே சிறப்பு. தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆண் ஜாதகருக்கு லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்க்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வது நல்லது, அதேபோல 2,4,12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடைய ஜாதகரோடு திருமணம் செய்வதும் நல்லது

செவ்வாய் ஆட்சி உச்சம்:

செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமற்ற நிலை ஏற்படும் என கருதுகின்றனர்.

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குறையும் என்றும் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது என்றும் கூறி வருகிறார்கள்.

செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் 

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

சீர்காழி அருகே தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும்.

வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும்.

அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட தோஷம் நீங்கும்.

தைரியம் வீரம் தரும் செவ்வாய் விரதம்:

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் – செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள்.

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கும்.

செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நல்லது.  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும். சகோதரர்களுடன் உறவு பலப்படும்.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் – செவ்வாய் கிழமையன்று, முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரை தானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button