HistoryVokkaligars

Vokkaligar Festivals – திருவிழாக்கள்

Vokkaligar – ஒக்கலிகர் திருவிழாக்கள். Vokkaligar ஒக்கலிகர் சமூகத்தினரால் கொண்டாடப்படும் பிற விழாக்கள் இச்சமூகத்தினரின் அனைத்துப் பிரிவினரும் பொதுவாகக் கொண்டாடப்படும் விழாக்களும் உள்ளன. அவற்றில் சில, 

Vokkaligar – ஒக்கலிகர் திருவிழாக்கள்

vokkaligar festivals

Vokkaligar – ஏர் பூட்டும் விழா 

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விவசாயப்பணி செய்யும் ஒக்கலிகர் சமூக மக்கள் நாள் ஏர்பூட்டுதல் என்ற விழாவின் மூலம் தத்தம் விவசாயப் பணியைத் துவக்குவர். அன்றைய தினத்தில் நல்ல நேரம் பார்த்து நிலத்தை உழுது பண்படுத்தி விதை நடுவர். அதனைத் தொடர்ந்து பயிரைப் பாதுகாக்க வேண்டியும், உரிய நேரத்தில் மழை தர வேண்டியும் ‘சப்த கன்னிமார் தெய்வத்தை வழிபாடு செய்வர். 

Vokkaligar – ஆடிப் பெருக்கு விழா 

ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண ஜெயந்தி விழா கம்பம் நந்தகோபால் கோவிலுள்ள தொழுவத்தில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

Vokkaligar – பொங்கல் விழா 

விவசாய நிலத்தில் அறுவடை முடிந்த பின் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா புத்தாடை அணிந்து புதுப்பானையில் புது அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

மேலும் வாசிக்க

Vokkaligar – மாட்டுப் பொங்கல் விழா 

மறு நாள் தங்களின் உழவுத் தொழிலுக்காகப் பெரிதும் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘மாட்டுப் பொங்கல் விழாவை மாடுகளைக் குளிப்பாட்டி சந்தன குங்குமமிட்டு அலங்காரம் செய்து மாலை அணிவித்து கொம்புகளுக்கு வண்ணம் பசி பட்டுத்துணி அணிவித்துச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றனர். அன்றைய தினம் கம்பம் நந்தகோபால் கோவிலுள்ள தொழுவத்திலும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. 

vokkaligar

Vokkaligar – மாத சிவராத்திரி விழா 

மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி விழா மாசிப்பச்சை என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 

அன்றைய தினம் இச்சமூக மக்கள் தங்களுக்குக் கிடைத்த பயறு வகை விளைச்சலுக்குக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாசிப்பயறு, அவரை, துவரை, தட்டைபயறு, கானம் பயறு உள்ளிட்ட பல்வேறு வகையான பயறுகளை வேகவைத்து கடவுளுக்குப் படைப்பர். 

அன்று இரவில் இச்சமூக மக்கள் தத்தம் குலதெய்வ கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வர். அச்சமயத்தில் கோவில் பூசாரி தானமனைக்காரர்கள் மற்றும் குலப்பங்காளிகள் தத்தம் மனைவியருடன் புனித நதிக்குச் சென்று பூஜை செய்து வழிபட்டு புனித நீர் எடுத்து வந்து கோவிலுக்குத் திரும்பி அங்கே விளக்கேற்றி தேங்காய் பழம் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்து எதிர்கால நலனுக்காகப் பிரார்த்திப்பர். 

vokkaligar

Vokkaligar – உள்ளூர் விழாக்கள் 

மேற்கண்ட விழாக்களுடன் இச்சமூகத்தினர் தத்தம் உள்ளூரில் உள்ள பகவதியம்மன். முத்தாலம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் மற்றும் மாரியம்மன் ஆகிய கோவில் விழாக்களை அவ்வூர் நாட்டாண்மைக்காரர் தலைமையில் கொண்டாடி வருகின்றனர். இத்தகைய விழாக்கள் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றன. 

விழா தொடங்குவதற்கு ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்னதாகக் கோவிலில் பந்தலிட்டு கொடிக்கம்பம் நட்டு கெடு வைக்கப்படும். விழாவின் முதல் நாள் இரவு இச்சமூக மக்கள் மேளதாளங்களுடன் புனித நீர் நிலைக்குச் சென்று பூஜைகள் செய்து குயவரால் புதுப்பானையில் அம்மனை செய்து கோவில் பூசாரி சுமந்தவாறு மக்கள் புடைசூழ கோவிலுக்கு கொண்டு வருவர். 

அதனைத் தொடர்ந்து அதிகாலையில் பெண்கள் நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவத்தில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்து பிரசாதம் பெற்றுச் செல்வர். 

காலை 10.00 மணியளவில் மக்கள் பல்வேறு பயிறுகளாலும், கம்பு தானியத்தாலும் வளர்க்கப்பட்ட பல்வேறு வடிவத்தாலும் அலங்காரத்தாலுமான முளைப்பாரிகளைத் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்குச் சென்று தங்கள் நன்றிகடனைத் தெரிவித்து வருவர். 

மூன்றாம் நாள் மாலை பூசாரி எழுந்தருளச் செய்த அம்மனையும் மக்கள் தயாரித்த முளைப்பாரிகளையும் சுமந்தவாறு மேளதாளங்களுடன் புனித நீர்நிலைக்குச் சென்று அம்மனையும் முளைப்பாரிகளையும் நீர்நிலையில் கரைத்துவிட்டு வீடு திரும்புவர். விழாவின் இறுதி நிலையாக தத்தம் சம்பந்தக்கார குலத்தார் மீது மஞ்சள் நிராடுதல் நிகழ்வு நடைபெறுவதோடு திருவிழா நிறைவுக்கு வரும். 

இவ்வாறு இச்சமூக மக்கள் வழிவழியாக தங்கள் முன்னோர்கள் வழிபட்ட முறைப்படி தத்தம் குலதெய்வம் மற்றும் பொது தெய்வங்களைத் தொடர்ந்து வழிபட்டு வருவது போற்றத்தக்க ஒன்றாகும். 

Related Articles

Back to top button